‘சர்வதேச நாடுகளின் உதவி இல்லாவிட்டால், இலங்கையின் நிலைமை மோசமாகிவிடும்’: ஐ.நா.சபையின் எச்சரிக்கை

Date:

வரலாறு காணாத உயர் பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடி உட்பட இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையான்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் உலகளாவிய கவனம் அவசரமாக தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்ததுஇ ஜூன் மாதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் அடியா வாரிஸ், கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகள் எதிர்கொள்ளும் கடுமையான விளைவுகள் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் நடவடிக்கையில் நாட்டின் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை தவறாகக் கையாண்டதற்காக  இராஜினாமா செய்யக் கோரி, ஆயிரக்கணக்கானோர் ஜனாதிபதி அலுவலகத்தின் முன் கூடியிருந்தபோது, ​​அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் அமைதியான போராட்டங்களின் போது கருத்து வெளியிடுவதற்கான அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...