சவூதியின் பிரபல உலக சுற்றுப்பயணி அறிஞர் நாஸிர் அல் அபூதி மறைந்தார்!

Date:

சவூதி அரேபியாவின் பிரபல எழுத்தாளரும் பன்னூலாசிரியர் மற்றும் சுற்றுப்பயணியுமான அறிஞர் நாஸிர் அல் அபூதி சவூதி ரியாத் நகரில் காலமானார்.

அவர் மரணிக்கும் போது வயது 97 ஆகும். 1926 ஆம் ஆண்டு பிறந்த அறிஞர் நாஸிர் அவர்கள் இஸ்லாமியத்துறையிலும் அதேபோன்று உலகை வலம் வந்த அறிஞர் என்ற வகையிலும் பிரபலம் பெற்ற ஒருவராக கருதப்படுகின்றார்.

நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு பயணித்து அந்த நாடுகள் தொடர்பாக விபரங்களும் தகவல்களையும் புத்தகங்களாக தொகுத்த ஒரு பிரபலமான ஒரு நிபுணராக கருதப்படுகின்றார்.

மேலும் 220 இற்கு மேற்பட்ட  பிரயாண சம்பந்தமான நூல்கள், மற்றும் வரலாறு சம்பந்தமான நூல்களும் எழுதியுள்ளார்.

சுற்றுப்பயணம் வரலாறு பேச்சுக்கள் நீண்ட காலமாக சவூதி வானொலி வழியாக செய்து வந்தமை முக்கிய அம்சமாகும்.

சவூதி உரைதா என்ற நகரில் பிறந்த அவர் அறிஞர் நாஸிர் அவர்கள் ஒரு ஆசிரியராகவும் ஒரு கல்லூரியின் முதல்வராகவும் திகழ்ந்ததோடு மதீனாவில் இருக்கின்ற இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் 13 ஆண்டு காலம் செயலாளராக கடமை புரிந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும் கடமை புரிந்ததோடு உலக முஸ்லிம் லீக் உன்ற சர்வதேச அமைப்பில் செயலாளர் நாயகமாகவும் பணிபுரிந்துள்ளார்.

இதேவேளை உலகின் பல நாடுகளை தரிசித்து அந்த நாட்டுடைய தகவல்களை திரட்டுவதற்கு இந்த பொறுப்புக்கள் வாய்ப்பாக அமைந்தன.

அரபு நூலகத்திலே பிரயாணம், சுற்றுப் பயணங்கள் சம்பந்தமாக புத்தகங்கள் என்ற வகையில் இவருடைய பிரயாண நூல்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் ஒரு இடத்தை பிடித்துள்ளன.

1974 ஆம் ஆண்டு இவருடைய இலக்கிய பணிகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மறைந்த அறிஞர் நாஸிர் அவர்கள் தன்னுடைய பிரயாணத்தின் தொடரிலே 1980 களில் இலங்கை வந்து இலங்கை தொடர்பாக பல்வேறு வரலாற்று நூல்களையும் தனது பயணக் குறிப்பையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவருடைய ஜனாசா சவூதி அரேபியாவில் ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்து.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...