சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்!

Date:

இரு நட்பு நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பொதுவான விருப்பத்தை உறுதிப்படுத்தியதாக துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் வலியுறுத்தினார்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாரீஸ் நகரில் உள்ள எலிசி அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் பாரிஸிலிருந்து புறப்பட்ட மக்ரோனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டத்து இளவரசர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இதன்போது ‘உங்கள் நட்பு நாட்டை விட்டு நான் வெளியேறும்போது, ​​எனக்கும் உடன் வந்த தூதுக்குழுவினருக்கும் கிடைத்த அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பட்டத்து இளவரசர்  தெரிவித்தார்.

இரு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் அதிபர் மக்ரோன் தலைமையில், பொது நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனையைத் தொடர இரு நாடுகளின் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் குறிப்பிட்டார்.

இரண்டு நட்பு நாடுகள் மற்றும் மக்களின் நலன்களை உணர்ந்து, அத்துடன் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும்,’ என்று பிரான்ஸ் தலைவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி மற்றும் மக்களுக்கு மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு போன்ற விடயங்களையும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.

இதேவேளை பட்டத்து இளவரசர் வியாழக்கிழமை பாரிஸ் சென்றதுடன் அதற்கு முந்தைய இரண்டு நாட்களை கிரேக்கத்தில் கழித்தார்.

இதனையடுத்து நேற்று எலிசி அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனால் வரவேற்கப்பட்டார், அங்கு அவர்கள் ஒரு பரந்த அளவிலான கூட்டத்தை நடத்தினர்.

இளவரசர் முகமது பின் சல்மான், யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரலைச் சந்தித்து, சவூதியின் கலாச்சார முயற்சிகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...