ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அதிரடி அறிவிப்பு!

Date:

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள், பாராளுமன்றத்தினுள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. ஏன் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நாட்டு மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாட்டை அழிக்கவா எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகிறோம்? இந்த கேள்வியை இளைஞர்கள் கேட்கிறார்கள். இது ஒரு முக்கியமான பிரச்சினை, நானும் இது தொடர்பில் சிந்தித்துள்ளேன். எனவே இந்த அமைப்பை மாற்றி இந்த இளைஞர்களின் கருத்துக்களுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும்.

“போராட்டம் உண்மையில் இன்று இருக்கும் முறைக்கு எதிரான போராட்டமாகும். இது எல்லா அம்சங்களிலும் மாற்றப்பட வேண்டும். எனவே, அமைதியான கருத்துக்களைக் கொண்டவர்களுக்கு அவர்களின் கருத்துக்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், அதேபோல் அவர்களுக்கு பதிலளிக்கவும் முடியும். மௌனமாக இருப்பவர்களின் கருத்துகளை ஏற்று செயற்பட வேண்டும். ஆனால் போராட்டம் என்ற போர்வையில் அரசாங்கத்தை கவிழ்க்க, வீடுகளை எரிக்க, ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக செயல்படுவோம். போராட்டத்தின் ஊடாக இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால் அதற்கு முழு ஆதரவு அளிப்பேன். அமைதியான மக்களுக்காக செய்துள்ளேன். இன்று அமைதியான மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். அமைதியான மக்கள் கருத்து தெரிவிக்க இன்னொரு தளத்தை உருவாக்குவேன். அரசியலமைப்புச் சட்டப்படி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் பிரதமர், எனது கட்சியில் நான் மட்டும்தான் இருக்கிறேன். அதனால் என்னால் தேர்வு செய்ய முடியாது.”

Popular

More like this
Related

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன்...

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த...