ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

Date:

நாட்டின் பிரஜைகளுக்கு தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டு வெளிப்படைத்தன்மை தொடர்பிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிக்கை பின்வருமாறு,

ஊழல் நிறைந்த தலைவர்களை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை இலங்கை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தக்கூடிய வகையிலான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிடுவது ஓர் முக்கிய விடயமாக காணப்படுகிறது.

தூய அரசியலுக்கான பொதுமக்களின் அழைப்புக்கு செவிசாய்த்து நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிட சட்டப்பூர்வமாக கடமையானவர்கள் இல்லை.

ஏன் கடமையானவர்கள் அல்ல என்பதற்கான விளக்கத்தை கீழுள்ள இணைப்பினூடாக தெரிந்து கொள்ளுங்கள்: https://bit.ly/3yKQbfW

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...