ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம்: ஐரோப்பிய ஒன்றியம்!

Date:

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை பாதுகாப்பதற்கும் நிலையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...