இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 440,110 ஆகும்.
குறித்த தரவுகள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த ஆனால் நிலையானதாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் இருந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை மீதான ஆர்வம் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
இலங்கை சுற்றுலாவின் மிகப்பெரிய ஆதார சந்தையாக இங்கிலாந்து உள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 4,714 பேர் இங்கிலாந்திலிருந்து வந்துள்ளார்கள்.
இந்தியா 3,375 வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,. ஜேர்மனி 2,322 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.