ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழுவின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
பொதுஜன இளைஞர் பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என, அதன் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான டி.வி.சானக்க, இளைஞர் அமைப்பு உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஸும் தொழில்நுட்பத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. செயற்குழுவில் உள்ள 75 உறுப்பினர்களில் 54 பேர் டலஸ் அழகப்பெருமுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வெறுமையாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மற்றொரு குழுவினர் தீர்மானித்துள்ளனர்.