டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான எரிபொருளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.