பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பல கலந்துரையாடல்களின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகக் கோருகிறது.
இதேவேளை டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.