தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!

Date:

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பரவலான கொவிட் நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது மக்களுக்கு அவசியமானது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்களில் பல தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மட்டுமே பெற்றவர்கள் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.

பூஸ்டர்களாக வழங்கக்கூடிய பைசர் தடுப்பூசிகள் அரசு சுகாதாரக் கிடங்குகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்சமயம் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியின் உரிய அளவைப் பெற்றுக் கொள்ளுமாறும் டாக்டர் கினிகே பொதுமக்களை வலியுறுத்தினார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...