தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள்  ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் காலியான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சராக பதவியேற்றார். மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 10 ஆம்  திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன்...