நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் தாய்நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் ஆணை முடிந்து விட்டதாகவும், நாட்டை அழித்து முடித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதை தவிர வேறு தீர்வு இல்லை என சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆணை முடிந்து விட்டது. அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த அழகிய தாய் நாட்டை அழிப்பார்கள்.
நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
இதைத் தவிர மாற்றுத் தீர்வு இல்லை. இதை எதிர்க்கும் நாடாளுமன்றத்தில் யாரேனும் நாசகார செயலை செய்தால் அதை தேசத்துரோகமாக பார்க்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தாய்நாட்டிற்கு தலைமையை கொடுங்கள்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.
தாய்நாடு வெல்லட்டும், மக்கள் வெல்லட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.