தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை: டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானம் – சஜித்!

Date:

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்

தான் நேசிக்கும் நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக சஜித் பிரேமதாச தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆகவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பங்காளி கட்சிகளும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...