(file Photo)
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது.
பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்த ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சத்தியப்பிரமாணம் செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.