பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை இலக்கு வைத்து சில நாசகார கும்பல் தீவைத்து எரிப்பதை கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு தரம் பாராமல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
‘இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நீதியால் ஆளப்படும் ஒரு சமூகத்திற்காக ஒரு சிவில் போராட்டத்தில் இணைந்தனர் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.
ஆனால் அந்த போராட்டம் என்ற போர்வையில் சில சந்தர்ப்பவாத மற்றும் சீர்குலைக்கும் குழுக்களால் மக்களின் வாழ்க்கையை குழப்பும் சொத்துக்கள் அழிவு, தீ வைப்பு மற்றும் சிறு சிறு நிகழ்வுகளை நிபந்தனையின்றி எதிர்க்கிறோம்.
கடந்த சில நாட்களாக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் பிரஜைகள் உட்பட பெருமளவிலான மக்களும் வன்முறைகளை எதிர்நோக்க நேரிட்டதுடன், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.