450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏனைய பேக்கரி பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் முன்பு ரூ.84.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா, தற்போது ரூ.300க்கு மேல் விற்கப்படுகிறது.