ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் வெற்றிடமாக இருந்த தேசியப் பட்டியல் ஆசனத்துக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டார்.