பாராளுமன்ற நுழைவாயில், காலி முகத்திடலில் பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, காலி முகத்திடலில் உள்ள “கோட்ட கோ கம” மற்றும் பாராளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு வாரிசை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

Popular

More like this
Related

35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று...

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்: ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டம்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள்...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும்...

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...