பேருவளை கெச்சிமலை தர்கா ஷரீப் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம்!

Date:

பேருவளை கெச்சிமலை தர்கா ஷரீப் அஷ்ஷைக் காலிப் அலவி பின் அஷ்ஷைக் முஹம்மத் அப்துல்லாஹ் (அலவியத்துல் காதிரி) (றஹ்மத்துல்லாஹி அலைஹி) (93) அவர்கள் இன்று இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம் தெரிவித்துள்ளது.

அஷ்ஷைக் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) மற்றும் அஷ்ஷைக் ஷுஐப் பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் அலவிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவையும், கெச்சிமலையில் நடைபெறும் புகாரி, முஸ்லிம் மஜ்லிஸையும் கடந்த 16 வருடங்களாக தலைமை தாங்கி நடாத்திய சிறப்புக்குரியவர்.

முஸ்லிம் சமூகத்தை ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதில் அன்னாரின் பங்களிப்பு பாரியதொன்றாகும்.

அன்னாரின் மகன் அஷ்ஷைக் கே.எம். ஸகீ அஹ்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், முஹிப்பீன்கள், முரீதீன்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...