பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
இதன்போது, எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் முன்பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் என்னையும் கோப் குழுவுக்கு அழைக்குமாறு சரித ஹேரத்திடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என ட்வீட் செய்திருந்தார்.
பெற்றோல் மற்றும் டீசலை தோராயமாக ரூ.250 விற்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்து காஞ்சனா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
I would like to kindly request @charith9 to call CPC & myself to the CPOE to inquire into the allegations made by PUCSL Chairman on FuelPricing & Procurement. Inquiry should be held on if the COPE & the Public was misled by PUCSL Chairman or CPC on fuel pricing & any other matter
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 8, 2022