பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி எட்டு கோடி ரூபாய்க்கு மேல் அதாவது மொத்த தொகையில் 49 சதவீதம் மக்கள் விழிப்புணர்வுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆணைக்குழுவின் அலுவல்கள் குறித்து விசாரிக்க, கோப் குழுவின் முன், ஆணைக்குழுவின் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.