பொய்த்துப் போன அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வு கூறல்கள்: கருத்துக்களம்

Date:

ரணில் பிரதமராகப் போகிறார் என்ற செய்தி காதுக்கெட்டியவுடனேயே அவரால் எதுவும் ஆகாது.

இருக்கும் நிலைமை இன்னும் மோசமாவது மட்டுமே நடக்கும் என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன்.

ரணில் மிகப்பெரும் அரசியல் மேதை என்றனர். கட்டாயத்தீமை என்றனர். நீங்கள் பிரதமராகலாமே என்று கிண்டல் வேறு செய்தனர்.இது கிழக்கிற்கே உரிய மனச்சிக்கல் என்றார் ஒரு ரணில் பக்தர்.

ஒரு முறை பாராளுமன்றில் ரணில் முன்னிலையிலேயே ‘ரணில் ஒரு புற்றுநோய்’ என்று சாடிய வீரவன்ஸ முதல் ஆஸாத் ஸாலி வரை அவரால் மட்டும்தான் இனி முடியும் என்றனர்.

சில அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அவதானிகள் கூட இந்த விவகாரத்தை தவறாகவே மதிப்பிட்டிருந்தனர்.

அவர்கள், குற்றுயிராய்க்கிடக்கும் நாட்டை ரணில்போல் ஒருவரால் தான் மீட்க முடியும் என இதயசுத்தியுடன் genuinely நம்பினர்.அதை சமூக வலைகளில் எழுதி அரசியல் ஆய்வாளர்களாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.

உண்மை அதற்குப் புறம்பானதாகவே இருந்தது. நான் மிகத் தெளிவாகவே சொன்னேன்.

ரணில் கூடினால் மூன்று மாதம் பதவியில் இருப்பார். அவர் அல்ல ஆசியாவின் பெரும் மூளைசாலியான அவரது மாமா ஜே. ஆர் வந்தாலும் ஒன்றையும் புடுங்க முடியாதென்று.

நான் இலங்கைப் பொருளாதாரத்தின் போக்குகளைப் பகுப்பாய்வு செய்து விட்டு இறுதியாகக் கண்டடைந்த உண்மையைத்தான் உரக்கச் சொன்னேன்.ஊருக்கே கேட்பதற்கு.

இப்போது என்ன நடந்திருக்கிறது? ரணில் பிரதமராகி இரண்டு மாதங்கள் நெருங்குகின்றன.

எரிபொருள் வரிசை நீண்டிருக்கிறது.எரிபொருளைக் கொள்வனவு செய்ய டொலர் எப்படிப்போனாலும் ரூபாய்களே இல்லை என்று மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் இன்று அறிவித்துள்ளார்.

பணவீக்கம் இன்று 54,6% அடுத்த இரு மாதங்களில் அது 70% ஆக உயரும் என அவர் எச்சரித்துள்ளார்.பொருட்களின் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

டொலர் இன்றைய தினம் 400 /-ஐ எட்டியுள்ளது.அடுத்த மாதம் 500/-ஐ தாண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

ஜுன் மாத இறுதியில் நாடு ஸ்தம்பிக்கும் என்ற எனது ஊகத்தை இன்று நிதர்சனமாகப் பார்க்கிறேன்.

நான் ஒன்றும் தீர்க்க தரிசியோ.அரசியல் ஞானியோ அல்ல. ஆனால் தரவுகளிலிருந்து(Data) உண்மைகளைக் (facts) கண்டுபிடிப்பது ஒன்றும் சீன வித்தையல்ல.பெரும் வீரவிளையாட்டுமல்ல. மாயமில்ல மந்திரமில்ல.

கோத்தா பதவி விலகாத வரை நிலைமை இன்னும் சிக்கலாவது தவிர்க்க முடியாதது.

ரணில் என்ற தேசத்துரோகியும் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் தெளிவாக இருப்பது நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது.அரகலயட ஜயவேவா!

கலாநிதி றவூப் ஸெய்ன் முகப்புத்தகத்திலிருந்து..

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...