போராட்டக்காரர்களின் ‘நோ-டீல் கம’ நீக்கம்!

Date:

கொள்ளுப்பிட்டி, அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்டத் தளத்தை அகற்றுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி  அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை ‘நோ டீல் கிராமம்’ எனக் கூறி அந்த இடத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து,  ‘நோ-டீல் கம’ அமைக்கப்பட்டது.

மே 09 அமைதியின்மையின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு வெளியே ‘நோ-டீல் கம’ போராட்ட தளத்தை அமைத்தனர்.

போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...