கொழும்பில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
கோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் இதுவரை ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
கலைந்து சென்ற மக்கள் மீண்டும் திரண்டதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.