மாகாணங்களுக்கு இடையிலான 3000 தனியார் பேருந்துகள் சேவையில் இல்லை!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (12ம் திகதி) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் தமது நாளாந்த பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஒரு இடத்துக்கு பஸ் வந்து மற்றுமொரு இடத்திற்கு செல்ல எரிபொருள் தீர்ந்து போகும் நேரங்களும் உண்டு என விஜித குமார தெரிவித்தார்.

டீசல் பற்றாக்குறையால் பேருந்துகள் இயங்குவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகளும், பேருந்து உரிமையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சுமார் 3200 மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், ஆனால் (12) சுமார் 200 பேருந்துகள் மட்டுமே இயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல நாட்களாக வரிசையில் நின்றாலும் நீண்ட தூர சேவைகளுக்கு எரிபொருள் போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைதூர சேவை பஸ்களுக்கு 120 முதல் 150 லீற்றர் வரையான எரிபொருள் தேவைப்படுகின்ற போதிலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 40 முதல் 80 லீற்றர் வரையான எரிபொருள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...