முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி முன்னிலை!

Date:

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாதிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் Agha Salman அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...