மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன: எரிசக்தி அமைச்சர்

Date:

இந்த வாரம் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்புக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாளை (12ஆம் திகதி) முதல் 15ஆம் திகதி வரையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் கச்சா எண்ணெய்க் கப்பலும் வரவுள்ளது.

மேலும் இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடையில் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வர உள்ளதாகவும், கப்பல் கொழும்புக்கு வந்ததன் பின்னர் பணத்தை செலுத்துமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் வரவிருக்கும் பெற்றோல் கப்பலுக்கான எஞ்சிய பணத்தை நாளை (12ஆம் திகதி) செலுத்துமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...