மே 9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை!

Date:

கடந்த மே மாதம் (9) காலிமுகத்திடல் ‘கோட்டா கோ’ கிராமத்தின் மீது கடமை தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசாரணைக்குப் பிறகு, சம்பவத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனித ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கடமை மீறல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பவத்தன்று குழுவினர் அளித்த வாக்குமூலங்களை முறையாக வெளியிடவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் தவறிவிட்டனர் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...