ரஞ்சனின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி நீதியமைச்சருக்கு அறிவுறுத்தல்!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...