பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.