நேற்று (ஜூலை 23) மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று (ஜூலை 24) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அன்றிலிருந்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது.