புகையிரத நிலைய ஊழியர்கள் உட்பட பல தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், இதன் காரணமாக இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல ரயில்வே தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தற்போது ரயில்வே தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இரத்து செய்யப்பட்ட புகையிரதங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசந்துறைக்கு காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் நகரங்களுக்கிடையிலான விரைவு வண்டியும் உள்ளடங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிலைய அதிபர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
புகையிரதத்தை இரத்துச் செய்வதன் மூலம் அந்த நிலையங்களுக்கு மக்கள் குவியும் கோபத்தினால் நிலைய அதிபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அது தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி அந்த நிலையங்களில் இருந்து டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும், பயணிகள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.