ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் கூடுதலாக 3000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பமாகி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமரின் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு விசேட அதிரடிப்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று (8) மற்றும் நாளை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
எனினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95,96 மற்றும் 97 இன் படி குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.