தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ், QR குறியீட்டை இயக்கக்கூடிய எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 713 சிபெட்கோ நிரப்பு நிலையங்களும் அடங்கும்.
இந்த முறை நேற்று மட்டும் 536 நிரப்பு நிலையங்களில் அமல்படுத்தப்பட்டது.
எரிபொருள் வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 87,005 ஆகும்.
நேற்று மட்டும் 1 இலட்சத்து 63,544 பேர் தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
நேற்றிரவு 08:30 மணிக்கு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து நான்கு இலட்சத்து 79,376 ஆகும்.