அனைத்து முச்சக்கரவண்டிகளும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்: எரிசக்தி அமைச்சு!

Date:

எரிபொருள் விநியோகிக்கும் புதிய நடைமுறையின் கீழ், இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனைத்து முச்சக்கரவண்டிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், தமக்கு அதிகாரத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது முச்சக்கரவண்டிகளை பதிவு செய்துக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், வருமான வரி பத்திரத்தின் இலக்கத்திற்கு அமைய, எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையொன்று எதிர்வரும் வெள்ளிகிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...