அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சஜித் அணி முடிவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் என்பன நேற்று (26.07.2022) கூடி பின்வரும் முடிவுகளை எடுத்தன.

01). கருத்துத் தெரிவிக்கும் உரிமை போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

02). மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

03). பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...