சர்வகட்சி இடைக்கால நிர்வாகத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு பல கட்சிகள் பெயர்களை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியின் பல குழுக்களும் ஆளும் கட்சியில் இருந்து சுயேச்சையாக செயற்பட்ட எம்.பி.க்கள் குழுவின் பிரதிநிதிகளும் நேற்று (10ம் திகதி) திருமதி தலதா அத்துகோரளவின் வீட்டில் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடலை நடத்தினர்.
சஜித் பிரேமதாசவுக்கும், டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் பிரிக்கப்பட வேண்டுமென இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இன்று (11ஆம் திகதி) சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு முன்னதாக தத்தமது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கு அனுகர குமார திஸாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி.க்கள் நேற்று (10ம் திகதி) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.