சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில்சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள கடிதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வழங்கல் வரம்பு மற்றும் நிரப்பு நிலையங்களின் பிரத்தியேக பட்டியல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது .
இதன்படி, மோட்டார் வாகனத்திற்கு 20 லீற்றரும், முச்சக்கரவண்டிக்கு எட்டு லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆறு லீற்றரும் அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.