பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம.;பிக்கள் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கோஷமிடத் தொடங்கினர்.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
இதேவேளை எந்தவொரு தரப்பினரும் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்பிறகு மகிழ்ச்சியுடன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.