பயாகல பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனியார் நிறுவனமொன்றுக்கு (எலிபன்ட் ஹவுஸ்) சொந்தமான நடமாடும் ஐஸ்கிரீம் வேன் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த ஹிலாரி பெர்னாண்டோ என்ற 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.