ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.
ஆனால், எரிவாயு விநியோகம் சாதாரணமாக மாறிய பிறகு அது தேவையில்லை என்றும் அதே நேரத்தில் கூறப்படுகிறது.
இதேவேளை அடுத்த எரிவாயு கப்பல் சனிக்கிழமை (16) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.