கரும்புலி தினத்தை முன்னிட்டு இலக்கு வைத்து வடக்கிலும் தெற்கிலும் குண்டுத் தாக்குதல் நடத்தலாம் என பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவிற்கு, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கடந்த 27ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதற்கமைய கடந்த 29ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த கடிதத்தின் சில பகுதிகளை வாசித்த அனுரகுமார திஸாநாயக்க,
குறித்த கடிதத்தில் ஜுலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்போது அரசாங்கம் என்ன தகவல்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்? என்ன உத்திகள் மூலம்? அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா? இல்லையேல், இந்த அரசுக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களில் ஏதாவது ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற செய்திகள் உருவாக்கப்படுகின்றன என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஜே.வி.பி மற்றும் ஏனைய எதிர்கட்சி அரசியல் கட்சிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த அரசியல் பிரசாரத்தில் அரசியல்வாதிகளைத் தாக்குவதற்கு அரசாங்கம் மிகவும் பொறுப்பற்ற குழந்தைத்தனமான நகைச்சுவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பல்வேறு அரசியல் வாதிகளை ஒடுக்குவது போல் வேடிக்கையான செய்திகளை உருவாக்குவது. அரசு என்ன காட்டுகிறது? நாடு எதிர்நோக்கும் ஆழமான நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எந்த புரிதலும் அல்லது தொலைநோக்கு பார்வையும் இல்லை.
இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக நாமும் ஏனைய அரசியல் கட்சிகளும் குறிப்பிட்டுள்ள இக்கட்டுரை எமது தரப்பிலிருந்து நிராகரிக்கப்படும் போது இந்த நாட்டு மக்கள் அரசாங்கத்தின் இந்த வேடிக்கையான நடத்தையில் சிக்கிக் கொள்ளக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இந்தக் கடிதம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகருக்கு இன்று அறிவித்தார்.