பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர் .
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் சென்ற போராட்டக்காரர்கள் குழு ஒன்று சாலைத் தடைகளை உடைத்து நுழைய முயன்றதைத் தடுத்ததுடன், பொலிஸார் அவர்கள் மீது தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
இந்த தாக்குதல்களில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.