கொழும்பு கோட்டையில் முன்னெடுக்கவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கெட் மாவத்தை, ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக அல்லது புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேறு எந்த இடத்திற்குள்ளும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘சேவ் ஸ்ரீலங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசட் அறக்கட்டளையின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய களுபோவில பதும தேரர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராக இருந்தனர்.

அவ்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் வீதியில் வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு, சிரமம், இன்னல்கள் ஏற்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, குறித்த நபர்களை அந்த இடத்திலோ அல்லது குறித்த எல்லைக்குட்பட்ட வேறு இடத்திலோ போராட்டத்தை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...