ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.
இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.
விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு அவரது தோல்வியுற்ற பதிலை எதிர்த்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பல மாதங்களாக நீடித்த போராட்டங்கள் அதிகரித்தன.
சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.