அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத முதிர்ந்த தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளனர்.
மேலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்லக்கூடிய தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அடங்குவர்.
இதையடுத்து ஜனாதிபதி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதன் பின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.