ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பாராளுமன்ற சபைத் தலைவர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜப்பான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷியும் கலந்துகொண்டார்.
மேலும், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்காக இன்று (12) தேசிய துக்க தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் கடந்த 8ஆம் திகதி ஜப்பானின் நாரா நகரில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.