ஜூலை மாதத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

Date:

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தடுப்பூசியைப் பெறக்கூடியவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர்) பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கு முதல் டோஸ் கூட எடுக்கப்படவில்லை என்று மருத்துவர் கூறினார்.

குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார சட்டங்களின்படி மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...