தெற்காசியாவில் புதிய வரலாறு படைத்த இலங்கையின் யுபுன் அபேகோன் 

Date:

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களில் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன்  புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தின் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக சுவிட்சர்லாந்தில்  நடைபெற்ற 42ஆவது Resisprint International சர்வதேச மெய்வல்லுனர் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், போட்டித் தூரத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், இலங்கை ஒரு நெருக்கடியை எதிர்கொண்டு எதிர்மறையான நேரத்தில் இந்த சாதனையை பெருமையாகக் கருதுகிறேன் யுபுன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நான் கடினமாக உழைத்தேன், இந்த வெற்றி எனது நாட்டிற்கு கொடுப்பதில் கொடுத்ததில் பெருமைப்படுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம் என்பதை நான் அறிவேன், மேலும் எனது வெற்றி எனது சக இலங்கையர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தனது வெற்றியின் பின்னர் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக யுபுன் கூறினார்.

அவரது வெற்றிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ரணசிங்க, அவரது எதிர்கால பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்குக் கிடைத்த பலமான ஆதரவைப் பாராட்டுவதாகக் கூறிய யுபுன், முன்னாள் அமைச்சர் தனது பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

நாமல் தனது பயிற்சியை தொடர்வதற்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக உயர் செயல்திறன் குழுவுடன் கலந்துரையாடியதாகவும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு தான் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

‘எனது நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்வதற்கான எனது நீண்ட பயணத்தின் ஆரம்பம் இது’ என்று யுபுன் மேலும் கூறினார்.

 

Popular

More like this
Related

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...